கர்ப்புத்தாள்

ஓட....
ஓடப் பேருந்து
உறுவ...உறுவ...
ஐந்து பேரின்
மனிதத் தன்மையற்ற செயல்!
நல்லவேளை
இறந்துவிட்டாள்!
இருந்திருந்தால் கேட்டிருப்பர்
இன்னும் தீர்ப்பைத் தரத்தாமதிக்கும்
இவர்கள்...
அவர்கள் உன்னை
எப்படி?
எங்கு?
என்னவெல்லாம் செய்து
காயப்படுத்தி வெறியைத் தணித்தனர்
என்று...
உணர்வே
இல்லை எவருக்கும்.....
இறந்தவள் எவனுக்கோ பிறந்தவள் தானே...?
**************************************
டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி கற்பழித்துக் கொலைசெய்து.....இரண்டு வாரங்களுக்குப் பிறகு எழுதிய கவிதை....