விழா

வாருங்கள் அமருங்கள் என்ற வார்த்தைகள் எங்கே
ஒன்று கூடி நடந்த விழாக்கள் எங்கே
வர்ணம் அடித்த கொம்புடன் ஓடும் காளை எங்கே
அலகு குத்தி ஆடும் பெண்கள் எங்கே
மஞ்சள் நீராடும் வழக்கம் எங்கே
கொஞ்சும் தமிழ் பழக்கம் எங்கே
இன்னும் சில நாள் போகட்டும்
சொந்த பந்தம் எல்லாம் மறையட்டும்
வெறும் வாழ்துக்களுடன் மட்டுமே
வாழ்கின்றன விழாக்கள் இன்று
விழாக்கள் தொலைந்து பொய் விட்டன இன்று....