நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி 2015

மனித நேயம்
மரித்துப் போனது...
மண்ணின் புனிதம்
கெட்டுப் போனது...!

தூய எண்ணம்
தொலைந்து விட்டது...
தொண்டு உள்ளம்
குறைந்து விட்டது...!

தீய ஒழுக்கம்
தீயாய் எரியுது...
மாய உலகில்
மனமும் மயங்குது!

செல்லும் வழியும்
சிறப்பாய் இல்லை...
சொல்லும் செயலும்
பெரிதாய் இல்லை...!

வன்முறை எங்கும்
வாட்டி வதைக்குது...
பொய்யும் புரட்டும்
பூத்து குலுங்குது...!

கவர்ச்சி வாழ்வில்
களிநடம் புரியுது...
வன்புணர்ச்சிக்
கொடுமை நடக்குது...!

அந்நிய மண்ணில்
வாழ்வது போல ...
என்னிடத் தோன்றுது
ஏன் இந்த நிலையோ?

நெஞ்சு பொறுக்குதிலையே!

எழுதியவர் : thanmuganambi (3-Feb-15, 10:47 pm)
பார்வை : 103

மேலே