உடைந்த கண்ணாடி

செல்லரித்துப் போகாமல்
என் நினைவுக் கருவூலத்தின்
உள்ளே பொக்கிஷமாய்
குவித்து வைத்த
கண்ணாடி துண்டுகளாய் ..துகள்களாய்
உன் மீது நான் கொண்ட காதல்
ஒவ்வொரு துகளிலும்
விரும்பியே விரல் நீட்டி
ரத்தம் வர கிழித்தாலும்..
அதில் உன் நெஞ்சின் ஈரம்
தெரிகிறதா என்றே சிவக்கின்றேன்..
இதுவரையில் தெரியவில்லை..
ஏன் உடைத்தாய் ..என்பதும்
புரியவில்லை..
மிச்சமிருக்கும் அணுக்களில் எல்லாம்
நீயே நிறைந்திருப்பதால்..
என் காதல் இன்னும் சாகவில்லை ..
என்றேனும் ஒரு நாள்
நீ வருவாய்..அது வரையில் ..
என் ஏக்கப் பெருமூச்சை
காற்றில் தூது சொல்ல
தொடுவானம் தாண்டி
அனுப்புகிறேன்..
தொட்டு பார் ..அவற்றில் ஒன்றை..
உன்னை தூக்கி வரும் சக்தி உள்ளவை
அவை..அனைத்தும்!

எழுதியவர் : கருணா (4-Feb-15, 11:25 am)
Tanglish : udaintha kannadi
பார்வை : 1153

சிறந்த கவிதைகள்

மேலே