திருமணப்பரிசு

உன் திருமணப்பந்தலில்...
என் தோல்களை கிழித்து .,தோரணமாய்
தொங்கவிட்டுக்கொள் ...

தண்ணிர் எதற்கு ? என்
செந்நீரைத்தருகிறேன் ...
மந்திரம் ஓதிக்கொள் !

பரிக்கை தூவவேண்டாம் ...
என் கண்ணீர் தூவி ஆசீர்வதிக்கிறேன் !

அன்பே ! அம்மி மிதித்தால் கால் நோகும் ...
வேண்டாம் .,அகற்றிவிடு....
என் இதயம் தருகிறேன் !
மிகவும் மென்மையானது !!

என் இதயம் மிதித்து ,
இறுதி சடங்கு பார்த்து
இன்புற்று வாழ்வாயாக....!

நீ மிதிப்பதைக்கூட அறியாமல் ...
உன் பாதம்பட்ட பரவசத்தில் ,
குதித்துக்கொண்டிருந்த என் இதயம் ....
மெட்டி கீரியதில் விழுந்த சொட்டு
ரத்தம் பட்டு .,
மடிந்ததடி !! என் இதயம் ...
என் இதயம் !

எழுதியவர் : vivekanandan (4-Feb-15, 12:36 pm)
பார்வை : 225

மேலே