எப்போது வருவாய் நீ

என் கண்ணின் கருவிழிக்குள்
கண்ணொளியாய் இருந்தாயடி
என் நாவில் சுவை மொட்டுக்கு
கரும்பாய் இனித்தாயடி..
என் இதயத்தை
இனிக்கவே செய்தாயடி
என் உயிருக்கு
சுவாசமாய் இருந்தாயடி..
என் வாழ்வின் வெளிச்சமும்
நீ தானடி
எனக்கு மனைவியாய்
எப்போது வருவாயடி..