காதல் வெண்பா பூக்கிறது 4

எனது காதல் அந்தாதி பா 4 இன் வெண்பா வடிவம்
இது வெண்பாவாக பூக்குமா ?
பெண்ணை மானே மானே என்று அழைத்தால் வெண்பா தானே வரும்

மானே மாலை வானத்து மஞ்சள்நிலாவே
தேனே தெவிட்டா தீந்தமிழ்ச் சுவையே
ஏனோ ஒருமாலையில் என்னைப் பார்த்தாய்
தேனோடை பாயுதடி நெஞ்சினில் பூங்குயிலே !
--------------------------------------------------------------------------------------------------------------------
திருந்திய வெண்பா வடிவம்
==========================
மானே மதுமாலை வானத்தின் பொன்நிலாவே
தேனே தெவிட்டாத தீந்தமிழே இன்சுவையே
ஏனோவோர் மாலையில் நீயெனைப் பார்த்தனை
தேனோடை பாய்ந்திடும் நெஞ்சு.
--------------------------------------------------------------------------------------------------------------------
வெண்பா ஆர்வலர்கள் அசை பிரித்து சீர் தாளை பார்த்து பிழையிருப்பின்
சுட்டலாம். தேர்ந்தவர்களுக்கு அந்த உரிமையும் கடமையும் எப்போதும்
உண்டு. உரிய சீரும் தளையும்தான் வெண்பாவிற்கு அழகு.

படம் : நதி வடித்த கல் வெண்பா
------வெண்பாவினன் கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Feb-15, 4:28 pm)
பார்வை : 82

சிறந்த கவிதைகள்

மேலே