என் நண்பன் அவள்

என் நண்பன் அவள்..!!!

யார் கண்ணிலும் படாமல் பாதுகாத்த
சாவிக்கொத்தொன்று அம்மா கையில் சிக்கியதும்
வெடுக்கென்றுப் பிடுங்கினேன் நண்பன் கொடுத்த பரிசென்று.
...
பிறந்த நாள் அர்ச்சனைக்காக கோவிலில் காத்திருக்கும்போது
"தம்பியைக் காலையில் கோவிலில் பார்த்தேனே"
என்று பூக்காரக்கா கூறும்போது சாமர்த்தியமாக சமாளித்தேன்
காலையில் நண்பனுடன் ஒருமுறை வந்தேனென்று. .

வீட்டில் அனைவரும் படம் பார்க்கும்போது
முக்கியமான காட்சியில் என்ன நடக்கும் என்று ஆர்வத்தில் கூற
மற்றவர்கள் எப்படித் தெரியுமென்று கேட்கும்போது
யோசிக்காமல் சொன்னேன் முன்பே நண்பனுடன் பார்தேனென்று.

வெளியூர் சென்றபோது நல்ல ஹோட்டல் எங்கு என்று தேட
எனக்குதெரியும் என்று சரவணபவன் கூட்டிச்சென்றபோது
எப்படி என்று அவர்கள் கேட்கும் முன் நானே முந்திக்கொண்டேன்
முன்பிருமுறை நண்பனுடன் வந்திருக்கிறேனென்று.

ஜாதகம் பார்த்துவிட்டு அப்பா ஒரு படத்தைக் காட்டி
இந்த பெண் தான் உனக்குப் பார்த்திருக்கிறோம் என்று கூறியபோது
மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று முதல் உண்மையைக் கூறினேன்
இவ்வளவு நாள் எனக்கு நண்பனாக இருந்த பெண் இவள்தானென்று.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (4-Feb-15, 7:16 pm)
Tanglish : en nanban aval
பார்வை : 86

மேலே