ஆதலினால் காதல் செய்வீர்

வைத்த நோக்கு அசையாது செல்லும்
மரமாய் இருந்த என்னையும்
காற்றடித்த திசையில் திரும்பும்
கிளையாய் மாற்றிவிட்டால்
காற்றினும் வேகமாய் கடந்து சென்று
என்னைக் காணும் அவள் ஓரக் கண்கள்
என் உள்ளத்தின் ஓரத்தில்
ஒலித்து வைத்திருந்த காதலையும்
சிறை பிடித்தன அவள் பார்வைகள் ......
பேதை மனிதர்கள் மின்சாரம்
இல்லையென்று ஏங்குகிறார்கள் -
அவர்கள் எவரும் அவள் கண்களை
காணவில்லை போலும் ....
அவள் இரு கண்களையும் காக்க
நான் அனுப்பிய காதல் தூதர்கள்
அவள் இரு இமைகள் .....
அவள் பார்க்கையில் நான் பந்தயக்
குதிரை ஆகிவிடுகிறேன் உன்னை மட்டுமே
நோக்குவதால் - அவள் அடர்ந்த கூந்தலில்
மறைந்தது நான் தந்த பூக்களின் மனம் .......

எழுதியவர் : ச.ப.ம்.ஜெயஸ்ரீ (4-Feb-15, 7:46 pm)
சேர்த்தது : ச்ப்ம்ஜெயஸ்ரீ
பார்வை : 53

மேலே