ஆதலினால் காதல் செய்வீர் - மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

தாயாருக்கு பின்னாலே சம்சாரம்
சம்சாரத்திற்கும் தாயாருக்கும் நடுவில்
சங்கிலி போடுபவள் காதலி
காதலியின் தோளிலும் மடியிலும்
மனம் சாய்த்து பார்
தலை சாய்த்து பார்
தாயாரை தாண்ட முடியாத
தாய் போல தோன்றுவாள்
காற்றடைத்த அந்த தேகத்திற்கு
காம வியர்வை ஊட்டிப்பார்
காதலி மறைந்து மனைவியாவாள்
தாய்மையின் தனிக் குணங்களை
தரம் தாழாமல் தந்து
கரம் சிரம் புறம்
பேணும் இரண்டாம் தாய்தான்
உண்மையான அன்பான ஆழமான காதலி
ஆதலால் காதல் செய்வீர் உண்மையாக


Address:
A.Richard Edwin,
S/O A.Arokiaraj,
137,melamanjampatty,manjampatty(post),
manapparai(t,k),trichy(d.t).
pincode = 621307
phone.no : 8973711885

எழுதியவர் : ஆ.ரிச்சர்டு எட்வின் (4-Feb-15, 7:09 pm)
பார்வை : 145

மேலே