ஆண் பிள்ளை
ஆண் பிள்ளை.
சிரிப்பேன் களிப்பேன் சிறுபிள்ளை போலே
விரிப்பேன் பறப்பேன் பனிஎல்லை மேலே
இதயம் திறந்து ஏற்பவர் முன்னே
எதையும் சிறந்து பார்ப்பதும் என்ன?
அழுவேன் தனியே ஆண்பிள்ளை நானே
அறிவேன் அதிலே தேன்கள்ளை தானே
விழுமுன் துளியை விழுங்கிடும் விழியே
வரும்பின் கனவில் விளங்கிடும் வழியே.
உள்ளம் ஒன்றில் கள்ளம் அறியேன்.
கள்ளம் மெல்ல சொல்லவும் தெரியேன்.
கரடு முரடாய் கோபம் மறியேன்
உறவில் நடிக்கும் அனுபவம் புரியேன்.
பெண்ணிடம் தேடக் காதல் ஒன்றோ!
என்னிடம் வாழ ஈதல் உண்டோ!
கண்ணிடம் அன்பு கனிவது கண்டோ
பண்ணிடம் சொல்லி பதிப்பதும் நன்றோ!
கூலிக்கு வேலை குதிரையும் ஓடும்.
கூழுக்கு வேலை ஆளுக்கு தேடும்.
ஆண்மகன் தேடும் அங்கி காரம்
தான்நிலை கூடும் தலைமுறை வாழும்.
கொ.பெ.பி.அய்யா.