நிறமாறா இதயக் கள்வனே

இளமஞ்சள் கதிர்கள்
இரு விழிகளைக் கூசச்செய்ய
இதயக் கள்வனே உனது கண்களை
இமைகள் கொட்டாமல் நேருக்குநேர்
இக்கணமே காணும் ஆவல் மிகுந்தது....

இளம்பச்சை தளிரின் ஊக்கம் காணின்
இளநகையோடு வலம் வரும்
இனியவனே நின் ஆண்மை
இதமாய் மனதைத் தழுவி
இடைவிடா கிளர்ச்சி என்னுள் எழுந்தது....

இளநீல நீரலைகளின் ஓயாத ராகம் கேட்பின்
இவ்வையகத்தில் நீ உரைக்கும்
இனிய தமிழ் செவியில்
இறகின் மென்மையோடு
இன்னிசையாய் ஊடுருவாதோ என
இயல்பாக ஆசை படர்ந்தது...

இளஞ்சிவப்பு அஸ்தமன சூரிய பிம்பங்களை காணின்
இரத்தத்தின் அணுசக்தி சூடேறி
இந்திரியம் மேலோங்கி மதமதப்பில்
இயக்கத்தின் இசைவுக்கு நின்
இரும்பு புஜங்களோடு
இணையவே மயக்கம் அதிகரித்தது.....

இருள் கவ்வும் வானம் உணரின்
இரவில் மிளிரும் பவுர்ணமி நிலவு போல்
இளமை பொங்கும் இறவாக் காதலாய்
இனிய சொப்பனமாய் உனது உணர்வில்
இவ்வுலகம் இயங்கும் வரையில்
இருக்கும் வரம் வேண்டி
இயற்கை அன்னையிடம் நிற்பது.....

இவள்
சூரியா....

எழுதியவர் : சூரியா (4-Feb-15, 11:04 pm)
பார்வை : 67

மேலே