காதலது இல்லையெனில்

மனம் தூக்கி சுமக்கிறது உன் நினைவதனை! - உனை
காணமல் அடைகிறதே அது வேதனை! - என்
காதல் சத்தம் அது கேட்கலையோ! - நான்
உன்னாலே உளறுகிறேன் புரியலையோ!

இக்கணமே விடுத்துடடி மனத்தடையும்!
உன் காலடியில் கிடக்குதடி என் இதயம்!
இல்லையென்று நீ உரைத்தால் அது உடையும்!
உண்டென்றால் என் வாழ்வின் இருள் விடியும்!

வலியாய் வலிக்குதடி என் நெஞ்சம்!
மனம் உனை தேடி அடிக்கடி கெஞ்சும்!
வந்தாலே பெண்ணே நீ என்னிடம் கொஞ்சம்!
என் உயிரது நாளை புவிதனில் மிஞ்சும்!

எழுதியவர் : சங்கீதா இளவரசன் (4-Feb-15, 8:51 pm)
பார்வை : 92

மேலே