நான்
செம் மண்ணிலே உழுது பொன்னிறமாய் தான் விளைந்த சம்பாநேல்லாம்
நான் அம்மானை ஆடிவந்து ஆவணியில் பூ முடிந்த பெண்னானம்மா
தென்பாங்க்கில் பன்னிரண்டு இன்னிசைகள் பாடிவந்த கண்ணாட்டியாம்
அன்பு தண்ணீரில் தான் வளர்ந்து உல்லாசமாய் விரிந்த செந்தாமரையாம்
நால்புறமும் பாலங்கட்டி நடுஅமைந்த நந்தவனம் என்வீடம்மா
நலுங்குவைத்து என்மாமன் நாண் பூட்டி கொண்டுவந்த பெண் நானம்மா
அலுங்கிவரும் அல்லிமலர் குங்கிவிழும் குண்டுமல்லி என்ஜாதியாம்
ஆற்றோரம் அருவியோரம் அலை அடித்துத் தள்ளிவந்த தேன்பாகம்மா
மாத்துத்தங்கம் பாத்தேடுத்து நல்முத்து கோத்தெடுத்த போன்னாரமாம்
வேர்த்த நெற்றி விருவிருக்க ஆற்றோரம் பாடுபடும் விவசாயி பெண்னானம்மா