வரலாற்று யாத்திரைகள் 04 - ஒரு பக்க கதைகள் - முரளி
அந்த நடுத்தர வயது போராட்ட வீரர் களைத்து வீடு திரும்பி யிருந்தார். மானிலத்தையே உலுக்கிக் கொண்டிருந்த போராட்டத் தலைவரின் நெருங்கிய உறவினர்.... இன்றய போராட்டம் சற்றே உக்கிரமாக மாறியிருந்தது.... நிறைய பொது சொத்துக்கு சேதம்.....
மூன்று பேருந்துகளை நிறுத்தி பயணிகளை எல்லாம் இறக்கியும் ஓட்டுனர் இறங்க மறுக்க.,.. எங்கிருந்தோ வந்த செங்கல் ஓட்டுனரின் மண்டையை பதம் பார்க்க.... பீரிட்ட ரத்தம் இவர் சட்டையெல்லாம் சிவப்பானது.... ஒரே கணத்தில் கட்சி மாறியது போல் தோன்றினார்,... இரண்டு பேராகத் தூக்கி ஓட்டுனரை கீழே இறக்க, யாரோ ஒரு தீப் பந்தத்தை தூக்கி வண்டிக்குள் போட்டனர்... பேருந்து கொழுந்து விட்டு எரிய, போராட்டக் காரர்கள் "தாய் மொழி வாழ்க! திணிக்கும் மொழி ஒழிக! " என்று கோஷமிட்டுக் கொண்டே அந்த இடத்தைவிட்டு அகல, தாமதமாக போலீஸ் எரிந்து கொண்டிருந்த வண்டிக்கு பாதுகாப்பு கொடுத்தனர்..,
அங்கிருந்து களம் மாறி நேராக புகை வண்டி நிலையத்திற்கு சென்றார்.... உடன் வந்த தொண்டர்கள் திணிக்கும் மொழிப் பலகை மேல் தார் பூச.... அங்கு வந்த வெளியூர் தொடர் வண்டியை மறித்தனர்.... போராட்டக் காரர்கள் வண்டியில் இருந்த அனைவரையும் இறக்கி கோஷம் போட்டுக் கோண்டே வண்டியை நிறப்பினர்..... வண்டியில் இருந்தவர்கள் எல்லாம் நம்மவர்கள் தானே... கொள்கைக்காக அவர்கள் படும் இன்னல்கள் பற்றி யாரும் கவலைப் பட வில்லை.... தலைவர் நமக்கு அளித்த கட்டளையை நிறைவைற்றிய திருப்தியில் போலீஸ் வருவதற்குள் இடத்தை காலி செய்து வீடு வந்து சேர்ந்திருந்தார்...
அன்று முழுதும் நடந்த போராட்ட அலைச்சல் சற்ற களைப்புடன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு இன்று இரவு தலைவரிடம் என்ன விவரங்கள் கூறுவது என்ற சிந்தனையில் சற்றே கண் அயர்ந்தார். அருகில் மனைவி வந்து லேசாக கனைப்பதைக் கேட்டு தலை நிமிர, கையில் காப்பியுடன் மனைவி.... காப்பி கொடுத்தும் நகராத மனைவியைப் பார்த்து கண்களால் 'என்ன?' என வினவினார்.
தயக்கத்துடன் மனைவி இரண்டு அட்டவனைகளை நீட்ட... தன் மகன்களின் அரையாண்டு மதிப்பெண் பட்டியல்.... பிள்ளைகள் இருவரும் பிரபல பள்ளியில் அந்நிய மொழி வழிப் பாடம் படிக்க, தான் எதிர்க்கும் மொழியும் ஒரு பாடமாக இருந்தது.... புரட்டிப் பார்த்தவர் பிள்ளைகள் தாய் மொழியில் சுமார் மதிப்பெண்ணும், எதிர்க்கும் மொழியில் நிறைய மதிப்பெண்ணும் பெற்றிருப்பதைக் கண்டு துணுக்குற்றார்.
மனைவி "என்னங்க நீங்க தாய் மொழி வாழ்க! வாழ்க! என்று ஊரெல்லாம் போராட்டம் நடத்தறீங்க,. ஆனா நம்ம புள்ளைங்க அந்நிய மொழியிலேயே படிக்கிறாங்க... வெளி நாடு வேற அனுப்பி படிக்க வைக்கப் போறதா சொல்லிக் கொண்டிருக்கீங்க,. இதைத் தவிர எந்த மொழிய எதுக்கறீங்களோ அத கத்துக் கொடுக்க டூசன் வேற... இதெல்லாம் நல்லாவா இருக்கு...?"
"போ போ., இதெல்லாம் அரசியல் உனக்கு ஒண்ணும் புரியாது போ., அரசியல் வேறு... குடும்பம் வேறு..." என்று விரட்ட கழுத்தை ஒடித்துக் கொண்டு மனைவி அகன்றாள்...
அசதியாக சாய்ந்தவருக்கு மனைவி சொன்னதன் யதார்த்தம் உறைத்தது... பல மொழி அறிந்தவராதலால் ஒரு மொழி வளர்வதாலோ / எதிர்ப்பதாலோ மற்ற மொழிக்கு என்ன நன்மை..... மறைமுகமாக அந்நிய மொழியை அல்லவா ஆதரிக்கிறோம்.... நம் தாய் மொழி உயர என்ன செய்யப் போகிறோம்... அதுதானே முக்கியம்.... இந்தப் போராட்டத்தால் என்ன பயன்,... இனி இதை தொடரக் கூடாது..... உடனே நிறுத்த வேண்டும்.,
ஒரு தீர்மானத்துக்கு வந்தவர், துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு "நான் தலைவரைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று குரல் கொடுத்து விட்டு நடையைக் கட்டினார்...
---------- -------------