மண்ணில் ஒரு வானவில்லாய்

அதிகாலை சூரியனாய் உன்னை தேடி வருகின்றேன்.. !!
உன்னை தேடி காணாமல் , அந்தி மாலை ஆகின்றேன். .!
தொலை தூர நிலா போல் எனை தொடர்ந்தே வருகின்றாய்.. !!
தலை திருப்பி பார்த்தாலே, மின்மினியாய் மறைகின்றாய்.. !!
இதம் தரும் சாரலாய், சில நேரம் நனைக்கின்றாய்... !!
ஆனாலும், பலநேரம் எரிமலையாய் தகிக்கின்றாய்..!!
மழலையின் குரல் போலே, நினைவுகளில் இனிக்கின்றாய்.. !!
நடக்கும் நிஜத்தில் எல்லாம், நித்திரையை பறிக்கின்றாய்.. !
ஆர்ப்பரிக்கும் அலையா நீ,
இல்லை எனை தாங்கும் தரையா நீ ?
விடை தேடி விடை தேடி, விடுகதையாய் போனேனே.. !
சொந்தம் எனும் விடையோடு நீ வந்தாலே,
சோகம் எல்லாம் சுகமாய் மாற,
மண்ணில் ஒரு வானவில்லாய் வளைவேனே..!! :-) :-)

எழுதியவர் : நிஷாந்தினி.கே (5-Feb-15, 12:45 pm)
சேர்த்தது : k.nishanthini
பார்வை : 214

மேலே