ஆதலினால் காதல் செய்வீர்-மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி
____ஆதலினால் காதல் செய்வீர்...!____
மனம் புரிந்த உள்ளங்கள் துருவங்களாய் பிரிந்து இருந்தாலும்
புவிக்கோடுகள் போல் சேர்த்து வைப்பது.....!
மெல்லிழை பூக்கள் குவியல் குளியலையும், தன்இணை
இதழ் உள்ளங்கை தீண்டல் உணர்வால் தோற்கடிப்பது.....!
ஆயிரமாயிரம் கூட்டம் ஜாதிமதம் கொடி பிடித்தாலும்,
அதையும் தாண்டி விதை ஒன்றிடிட்டு சுரையாய் முளைப்பது.....!
தான்மனம் கவர்ந்தாரோடு செல்லும்போது, கொடு
நரகத்தையும் சொர்க்க நகரமாய் ஏற்க வைப்பது....!
தன்னவள் கைவிரல் முடிகோதும் போது,முடிசூடா மன்னனாய்
பவளவைர பொன்முடி சூடலையும் வெறுக்க வைப்பது.....!
புறஅழகால் காதல்,கண்டதும் காதல் என்பதையெல்லாம்,
கண்காண முடியாதவனுக்கும்,முக அழகில்லாதவனுக்கும்
அர்த்தமுள்ள வாழ்வளித்து தோற்கடிப்பது.....!
அன்புபண்பு பாசம்நேசம் கோவம் நல்லத்தனம்,கள்ளத்தனம்
கலங்கம்,காமம்,இன்பதுன்பம் என பலவற்றை ஒருசேர ஊட்டுவது.....!
மண்ணையும் மலையாக்குவது.....! மலையையும் மண்ணாக்குவது.....!
உயிர்நீத்து உடல்பிரிந்தாலும், நினைவுகளாய் நிலைத்திருப்பது.....!
கருக்கதையே இன்றி ஓர் அர்த்தமுள்ள காவியத்தையே படைக்கவல்லது.....!
இவை அனைத்தும், உண்மைக்காதல் அன்றி வேறொன்றுண்டோ உலகில்.....!?
ஆதலால் காதல் செய்வீர்.......!மெய்யாக....!
-அன்பு.சங்கர்
அரியலூர்.
+91)08089216390