மலர்க்கொடியாள்

பூவையின் இடையை
கொடி என நினைத்தும்
சிவந்திட்ட இதழ்களை
மலரென நினைத்தும்
மயங்குகின்றன பட்டாம்பூச்சிகள் .
பாவம் அவைகளுக்கு எங்கே
தெரியபோகின்றது
பதுமையை படைத்த பிரம்மனே
பாவையவள் பார்வையில் மயங்கி
பைத்தியம் ஆனது ..!!!"

எழுதியவர் : கயல்விழி (5-Feb-15, 6:05 pm)
பார்வை : 360

மேலே