மண் பயனுற வேண்டும்

மண்ணை மலடாக்கிய மனிதனே
இனி சோதனைக்குழாயிலா விவசாயம்

மனிதன் குடித்தால் மாண்டு போகும் விஷத்தை
மண் குடித்தது போதும்

மண் தின்னும் மண்புழுவை
மண்ணே தின்னலாமா

உன்னை மட்டும் சுமந்தால் போதும் என்று
தாயையே கொல்லாதே

தாத்தாவிற்கு விளைந்த மண்
பேரனுக்கு விளையவில்லை
பேரனுக்கு விளையும் மண்
என் பிள்ளைக்கு விளையுமா

வயிற்றில் செரிக்காத வண்ணப் பைகளை
வாயில் திணிப்பது என்ன நியாயம்

கிள்ளி எடுக்க கை விரித்தால்
அள்ளி எடுக்கும் ஆசையைக் குறை

மாற்றுப் பயிர் செய்து
மாறும் தலைமுறைக்கு
மாறாமல் கொடுப்போமே
மண்வளத்தை.......

எழுதியவர் : மகேஷ் (5-Feb-15, 5:34 pm)
சேர்த்தது : மகேஷ்
பார்வை : 82

மேலே