என் கேள்விக்கென்ன பதில் - 1

(தன் 5 வயது மகனிடம்)
தந்தை: தம்பி, இனிமே நாம இந்த சாக்லெட் பிஸ்கட் இதல்லாம் சாப்பிடுறத விட்டுட்டு பழங்கள் வாங்கிச் சாப்பிடுவோம் டா... அதுதான் உடம்புக்கு நல்லது...

மகன்: எந்தப் பழம் சாப்டா ப்பா உடம்புக்கு நல்லது?

தந்தை: எல்லாப் பழமும் நல்லதுதான் டா...

மகன்: எல்லாப் பழமுமே உடம்புக்கு நல்லதா ப்பா?

தந்தை: ஆமாண்டா கண்ணா...

மகன்: அப்ப அழுகின பழம் சாப்டா கூட நல்லதாப்பா?

(பதிலற்று வாயடைத்துப் போன தந்தை என் நண்பர்தான்!)

எழுதியவர் : விஜயநரசிம்மன் (5-Feb-15, 6:15 pm)
சேர்த்தது : விசயநரசிம்மன்
பார்வை : 108

சிறந்த நகைச்சுவைகள்

மேலே