ஆதலினால் காதல் செய்வீர்

பலரும் கூற கேட்டிருக்கிறேன் ,
சிலரும் அழ வியந்திருக்கிறேன்,
நண்பனும் நெகிழ உணர்ந்திருக்கிறேன் ,
தோழியும் துயில் துறக்க கண்டிருக்கிறேன் .
இன்றே இவை அனைத்தும் என் வசம் ஆகிறது!!!
உன் நரை முடி சேர்ந்த கூந்தல், கரு மேகத்தின் இடையில் அமைந்திருக்கும் நட்சத்திரம் போல் ஜொலிப்பது ஏனோ??
உன் முகத்தின் தோல் சுருக்கங்கள் உன் அன்பிற்கு கிடைத்த விருதுகள்
தானோ?
உன் மழலை புன்னகையை கண்டால் மனம் மயங்கி உன் மடியில் விழ செய்வது விந்தை தானோ?
உன்னை மூன்று எழுத்து சொற்களால் அடக்க இயலாது,உன்னை அழைக்க சொற்கள் வேண்டாம் என் ஒரு துளி கண்ணீர் மிகும், பூமி தேவதை மீது என் கண்ணீர் தவழ்வதற்கு முன்னால் என் தோள்கள் தழுவ என் கரம் பிடிபாய் அன்பே !!
எனினும் நீ வேற்று கிரக வாசி என்பது பலருக்கும் புலப்படுவதில்லை , நீ போன பின்பே உன் சுவாசத்தை அறிந்து கொள்கிறார்கள் .
ஆனால் நான் இன்றே உன்னுடன் கலக்க விழைகிறேன்,கடை வீதிக்கு அழைத்து சென்றாய் , கருவில் சுமந்து நின்றாய் ,கண் கலங்கி மறு ஜென்மம் எடுத்தாய்..ஆனால இறப்பை மட்டும் தனிமையில் எடுத்து சென்றாயே !!
அம்மா !!!
நானும் உன்னுடன் வருகிறேன், இம்முறை சுமையாய் அல்ல உன்னை சுமந்து செல்வதற்காக ....
ஆதலினால் காதல் செய்வீர் ...அவள் மூச்சு உள்ள வரை அல்ல உன் மூச்சு உள்ள வரை !!!!