மனம் வாழும் சொர்க்கம் - உதயா

பசுமை ஜீவன்களின்
கூடல் வாசங்கள்
மண்ணெங்கும்
மலையெங்கும்
மணக்க
நீரின் புன்னகைகள்
ஏரிகள் எங்கும்
கால்வாய்கள் எங்கும்
குளங்கள் எங்கும்
மலர
வழியெங்கும்
தென்னை மரங்களும்
பனை மரங்களும்
காவல் காக்க
கோடைகள் தோறும்
காவலாளிகள்
இளநீரையும்
நொங்கினையும்
படையல் அளிக்க
காடு கரைதோறும்
ஆடு மாடுகளின்
இசைக்குரல்கள்
ஒலிக்க
மலைகள் தோறும்
மரங்கள் தோறும்
கிளிகளின் ஊடல்கள்
ஜொலிக்க
கிணற்றில்
முளைத்த செடியில்
அமைந்த கூட்டில்
தூக்கனா குருவிகளின்
பாடல்கள் அரங்கேரியக்
காலங்கள் மறைந்து போயின
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா !!!!!!
நினைத்தாலே ஆயிரம்
பூக்கள் மனதில்
பூக்கின்றன
கோடானக் கோடி
சிறகுகளோ
நினைவில் முளைக்கின்றன
இன்றோ ?
நவ தானிங்களின்
வீடுகளை எல்லாம்
மனிதன் அழித்து
மாடி வீடுகளைக்
கட்டிவிட்டான்
ஏரிக் கிணறுகளெல்லாம்
பாதாள சாக்கடைகளாக
மாறிப் போயின
வானளவு உயர்ந்து
நின்ற பனை மரம்
தென்னை மரங்களெல்லாம்
மின்சார கம்பங்களாக
மாறிப் போயின
குருவிகளின் புன்னகையும்
வண்டுகளின் இன்னிசையும்
வாகனச் சத்தங்களாக
மாறிப் போயின
பசுமை ஜீவனெல்லாம்
பட்ட மரமாகி போயின
தொலைந்து போனது
என் சொர்க்கம்
இல்லை இல்லை
மனிதனால்
மறைந்து போனது
என் சொர்க்கம்
என் உடல் மட்டும்
நகர உலகிற்கு
கடத்தப்பட்டிருந்தும்
மனம் இன்னும்
அச்சொர்க்கத்திலே
வாழ்கிறது .........