காவியத் தலைவா

காவியத் தலைவா!!!
இல்லறத்தில் நேசம் வைத்து
இணைய காத்திருக்க
இவள் இருந்தும்
இவ்வுலகை நீ சுற்றி வருவதேனோ?
கால சுழற்சியில் கரைந்து
இதயத்தில் ஒளிர்ந்த காதல் தனை
காலம் தாழ்த்தி நடந்தவைகளை
இயல்பாய் வார்த்தைகளின் கோர்வையாய்
கவித்துவமாய் எடுத்துரைத்தும்
கனியவில்லையா உந்தன் மனது?
கிராமத்தின் பசுமை வாசத்தோடு
கதிரவனைக் கண்ட நாணத்தோடு
நெற்கதிர் தலை கவிழ்ந்து அசைந்தாட
காவியத் தலைவா!!!
நெஞ்சம் மறுகி நின் அரவணைப்புக்காக
காத்து ஏங்கி நிற்கும் இவளது
காதல் நின்னை அசைக்கவில்லையா?
இங்கிதம் அற்று தொடர்ந்து
உன்னிடம் உரையாடும்
இப்பேதை அச்சத்தோடு
இரு விழி மிறள்வது கண்டு
உன் உயிர் மலர வில்லையோ?
நிஜத்தின் நிதர்சனத்தை உணராமல்
பிம்பத்தின் பிரதிபலிப்பை பார்த்து உன்
மனம் மயங்குவது ஏனோ?
பிடித்திருந்ததால் தானே நின் மனதில்
பட்டதை வெளிக் கொணர்ந்தாய் அன்று....
இன்று ஏன் அந்த காதல்
இல்லை உன்னிடத்தில்???
போதும் இந்த மவுனம்
இம்சிக்கிறது இந்த பேரமைதி
பதில் ஒன்று உரைத்திடு....
காத்திருப்பவள்
சூரியா