ஏழையின் கணக்கு

இரண்டு பேணி மா
எட்டு ரொட்டித் துண்டு
நான்கு கரண்டி வெல்லம்
ஐந்து குவளை தேநீர்
நான்கு காய்ந்த வயிறு
கூட்டிக் கழித்துப் பெருக்கி
பிரித்துப் பகிர்ந்து
கொடுத்த
கணிப்பின் திருப்தியில்
நிறைந்த
ஐந்தாவது வயிறு
அசை போடுகிறது
நாளைய கணக்கை...

எழுதியவர் : சிவநாதன் (6-Feb-15, 1:22 am)
Tanglish : kanakku
பார்வை : 93

மேலே