காற்றின் கண்ணீரில் கலந்துப் போகும் காதல் - இராஜ்குமார்

காற்றின் கண்ணீரில் கலந்துப் போகும் காதல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதழ் சிரிப்பை இமையில் வைத்து
அக்கறை எனும் உன் அழகியலை
மறக்கச் சொன்ன உன் விருப்பத்தோடு
என் விழிகளில் வரைந்து தைத்தேன் ..!

வரையும் முன் வாசமில்லா உன்விழி
பாசத்தால் வாங்குது எனைப் பழிக்குப்பழி
விழியோடு மோதிய உன் முகமொழி
நெஞ்சில் நிறைந்து வாழும் அகமொழி ...!!

நினைவில் என்றும் எனைத் தொட்டு
நிஜத்தை நீயே நிறுத்தி விட்டு
குறுநகை கொஞ்சம் சிதற விட்டு
குழப்பத்தின் உச்சத்தை நீயே வெட்டு ..!!

கல்லைத் தேடி இடிக்குது கால்நகம்
முள்ளைத் தேடி ஒடிக்குது கைநகம்
காதலை மறுத்தது ஏனோ உன்மனம்
உனையே உருகி ரசிக்குது என்மனம் ..!!

வேண்டிய வேதனை இதுதானோ
தேடியத் தேவதை நீதானோ
நடந்துப் போகும் நறுமண மலரே
நான் சிரிக்க வேணும் உன் உறவே ..!!

நீ
காதல் மறுத்த
கணத்தின் ரணத்தை
நினைக்க நினைக்க
சகிக்க முடியலே சகியே

பெண்ணேச் சற்று
உற்றுப் பார்

உன்
நடையோடு நகரும்
காற்றின் கண்ணீரில்
கலந்துப் போகுது
என் காதல் !!

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (6-Feb-15, 9:16 am)
பார்வை : 66

மேலே