மொழி திணிப்பேனடா மூடனே

அய்ம்பது வருட மொழிப்போரில்
உயிர் நீத்த உத்தமர்களின் செந்நீர்
ஒழுகிய தடம் பார்த்தென்
கண்கள் குருதியை சுரக்கிறது ..

மொழி திணிப்பென்னும் விபச்சார
முந்தியை விரிக்காதே என்பத்தினி
தாயை கண்ணீரில் கதற வைக்காதே.

இருபத்திரண்டு அறைகொண்ட இதயமடா
இந்திய தேசமதில் அறையொன்றை
மட்டும் முன்மொழிவதேனடா மூடனே ?

கலப்பட பாலருந்திய கயவனே -தூய
தமிழ்பால் அருந்திய எங்களின்
உணர்வினை உறிஞ்சி குடித்திட
துடிக்கும் உண்ணியே ,உன்னை
நசுக்கிட என்கால் கட்டைவிரல் போதுமடா .

உன்னை ஈன்றவளும் தாய்
என்னை ஈன்றவளும் தாய்
உனகிருக்கும் பற்றுதானடா
எனக்கிருக்கும் மடையனே ....

உணர்வுக்கு பங்கம் விளைவிக்கும்
பாதகனே ,உன் நாவினை அறுத்து
வீசியப்பின் உன் ஊமைநா பேசும்
மொழிஎதுவோ அதுதாண்டா உணர்வு
அறிவிலியே ...

எந்தாய் சேலையை உறுவிட துடிக்கும்
ஊதாரி பையலே உன் மொழிதிணிப்பை
மறந்துவிடு இல்லையேல் மண்ணைக் கவ்வி
தரித்திரம் பிடித்து தலைகுனிந்தே நிற்பாயடா
இது எந்தாய் மேல் ஆணையடா ..

தாய்மையை போற்றுவோம்
தன்மானத்தைக் காத்திடுவோம்
ஊறு விளைவிக்கா உணர்வுகளை
மதித்திடுவோம் ....

வாழ்க தமிழ் !வளர்க தமிழ் !
மொழிப்போர் தியாகிகளுக்கு
என் தமிழ்உணர்வு சமர்ப்பணம் ....

எழுதியவர் : பிரியாராம் (7-Feb-15, 11:33 am)
பார்வை : 353

மேலே