தமிழா தமிழா

தமிழா ! தமிழா!
தலைநிமிர் தமிழா...!
உன்
தன்மானம்
போனதெங்கே தமிழா!

தாழ்ந்து பணிந்து
வாழ்ந்தது போதும் ...
உனக்குள்
சண்டையிட்டு
மடிந்தது போதும் ...!

இமயம் முதல் குமரிவரை
இருக்கும் பெரும் நிலப்பரப்பை
ஆண்ட நீயா...
அடிமைப்பட்டுக் கிடப்பது ?
கூனிக்குருகி நடப்பது?

பழமை மறந்து திரிகின்றாய் ...!
வந்த
பாதை மறந்து அழுகின்றாய் ...!

போதை தன்னில் மிதக்கின்றாய் ...!
பிறர்
பொய்யில் உழன்று தவிக்கின்றாய்...!

அடத் தமிழா...
உனக்குள் இல்லை
ஒற்றுமை என்பதாலேயே...
அண்டிப் பிழைக்க வந்தோரெல்லாம்
சண்டித்தனம் செய்கின்றார் ...!
உன்னை
வண்டியில் பூட்டி
வலம் வருகின்றார்!

வீழ்ந்து கிடந்தது போதும்...
விரைந்து நீ கிளம்பு ...!
பெரும் நெருப்பாய் எழுந்திடு !

உன்முகம் சிவக்கட்டும் !
உயிர்த்தெழு...
தமிழ்மனம் பரவட்டும் !

எழுதியவர் : thanmuganambi (7-Feb-15, 9:56 pm)
சேர்த்தது : தன்முகநம்பி
Tanglish : thamila thamila
பார்வை : 147

மேலே