நெஞ்சு பொறுக்குதில்லையே , மண் பயனுற வேண்டும்- கவிதை போட்டி

நெஞ்சு பொறுக்குதில்லையே
இலக்கனத்தை மீறிய
இவர்களின் உறவுகளை
நினைத்தும்,
மனிதனை மிருகமாக
மாற்றிய மதங்களை
நினைத்தும்,
உழவுக்கு உழைத்தவனுக்கு
ஒரு பிடி உணவு இல்லாமையை
நினைத்தும்,
வழி இருந்தும் வாழ விரும்பாத
வாலிபர்களின் வக்ர
எண்ணங்களை நினைத்தும்,
நெஞ்சு பொறுக்குதில்லையே,..
இந்த நிலை மாற மன்றாடுவோம்,
இறைவனிடம் அல்ல,
மேலே உள்ள இவர்களிடம்........