கௌரவ வாத்சல்யம்

கௌரவ வாத்சல்யம்
===================

இரத்தமல்லியிலையினை
சூரியப்ரகாச சஞ்சாரத்தில்
ஏழு பகல் உணக்கி
ஏழு பௌர்ணமித்தொடரத் தணுப்பாக்கி
இராக்குறுஞ்சி பூம்பொடிச்சேர்த்து
நேரியம்பால் சாரல் சாற்றி
நெய்தலாம்பல் தளையிலிட்டு
பனிநீர் ஒழுக்கி
கதலித் தண்டில் வார்த்தது
ஏழு கைப்பிடி என எடுத்து
குதிகால் தணுப்பு மாற்ற
வந்திருக்கின்றான் ஒரு வேதசூரியன் ம்ம்கும்ம்
பொள்ளலோ பொற்றையோ அல்ல
மதலிகை சாத்தி
துவளாது நிறுத்தி
நூனாழியிட்டு கிளவிகொத்த வழிகின்றது
தினைத்தாளாய் இன்று ஞாபகரத்தம்
ககன சந்திரக்கவிகையின் கீழே
ஏதுமற நின்று
மீனிடைத்தளர்த்தியலாளை
தடயங்களி ல்லாது
நிகாதஞ் செய்த மாறன் நீ
ஓரிராகம் உகுக்கக்கோரி
பற்றில்லாத பொய்தல் பொழிந்த
அம்மருட்சிக் கிடப்பினிடையில் நன்னை
பைதலின் ஒர்மைகளிலாழ்த்தி
மாயமென மறைந்தீரேக்கள்வரே
இன்றென்ன விதரணம்
செல்லும் சென்றுவாரும் மற்றொருமுறை ம்ம்ம்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (7-Feb-15, 12:55 pm)
பார்வை : 74

புதிய படைப்புகள்

மேலே