நெஞ்சு பொறுக்குதில்லையே

மண்ணில் விளைவனவற்றை உண்ணச்சொன்னால்,
மண்புழுவை உண்கிறாயே மானுடா!!!
நெஞ்சு பொறுக்குதில்லையே!!!

வயலில் இறங்கச்சொன்னால், பெற்றோரிடம்
வாதத்தில் இறங்குகிறாயே மனிதா!!!
நெஞ்சு பொறுக்குதில்லையே!!!

மண்வளத்தைக் கூட்டச்சொன்னால், மண்ணில்
செயற்கை உரத்தைக் கூட்டுகிறாயே மானுடா!!!
நெஞ்சு பொறுக்குதில்லையே!!!

புலன்களை அடக்கச்சொன்னால், பூவையரின்
உரிமைகளை அடக்குகிறாயே மனிதா!!!
நெஞ்சு பொறுக்குதில்லையே!!!

மனவலிமையைப் பெருக்கச்சொன்னால்,
மக்கள்த்தொகையைப் பெருக்குகிறாயே மானுடா!!!
நெஞ்சு பொறுக்குதில்லையே!!!
மரங்களை வளர்க்கச்சொன்னால், மனதில்
வஞ்சத்தை வளர்க்கிறாயே மனிதா!!!
நெஞ்சு பொறுக்குதில்லையே!!!

நீ பிறந்த மண்ணிது, காப்பதும் உன் கடமை...
உன்னைச் சுமக்கும் மண்ணும் இது, சுத்திகரிப்பதும் உன் கடமை...

எழுதியவர் : (7-Feb-15, 12:42 pm)
சேர்த்தது : மதுராதேவி
பார்வை : 53

மேலே