மன்னிப்பு……

ஏய் கடவுளே……!
என்னை ஏன்
பெண்ணாகப் படைத்தாய்
இதற்கு உன்னை மன்னிக்கிறேன்……!

என்னை ஏன்
இம்மண்ணில் பெண்ணாகப் படைத்தாய்
இதற்கும் உன்னை மன்னிக்கிறேன்……!

என்னை ஏன்
உணர்ச்சியுள்ள பெண்ணாகப் படைத்தாய்
இதற்கும் உன்னை மன்னிக்கிறேன்……!

என்னை ஏன்
வண்டு மொய்க்கும் தேனாகப் படைத்தாய்
வண்டுகள் உறிஞ்வது தேனையல்ல என் ரத்தத்தை
இதற்கும் உன்னை மன்னிக்கிறேன்……!

ஏனென்றால்,
உறிஞ்சிய வண்டு இறந்தற்கு அல்ல
உறிஞ்ப்பட்ட நான் விதையாக மாறியதற்காக
மீண்டும் பிறப்பேன் இம்மண்ணில்
இசை பிரியவளாகவே
எழுவேன் எரிமலையாக
அழிப்பேன் பாதசுவடுகளை - இந்நாளில்
அடிமைகளாகிய நாங்கள்
இனியும் வீழ்வோமென்றால்
இதற்கு மன்னிப்பே கிடையாது……!

எழுதியவர் : ராஜா (7-Feb-15, 2:34 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 95

மேலே