கச்சிதமாக நடந்தது ……
பத்து வட்டி கடன் வாங்கி
பக்குவமா வளர்த்தக் கதிருக்கு
பருவ மழையும் கைகொடுக்கவில்லை
பாழாப்போன மின்சாரமும் கைகொடுக்கவில்லை
மாதம் மாதம் எல்லா ராசிக்கும் ராசிப்பலன் மாறுது
மறுஜென்மம் எடுத்தாலும் எங்கள் ராசிக்கு மட்டும் பட்டினி மாறாது போல
மாறுவேடப்போட்டியில் விவசாயி வேடத்திற்கு பரிசு கிடைக்குது
மாரியின்றி உழைக்கும் எங்கள் வாழ்வில் வளர்ச்சி மட்டும் கிடையாது போல
நாள் கிழமை பார்க்காமல் பாடுபடும் எங்களுக்கு
நாள்தோறும் பஞ்சப்பாட்டாவே இருக்குதே
நெற்களஞ்சிய ராசா என்று பட்டம் சூட்டிய எங்களுக்கு
நெல்சோறு சாப்பிடும் ஆசை ஆகாயத் தாமரையாகவே இருக்குதே
கனவு ஒன்று கண்டேன்
கள்வன் வந்து திருடுவது போல
களவும் கச்சிதமாக நடந்தது
கண்ணீரோடு என் செல்வங்கள் என்னைச் சுற்றி ……!