நெஞ்சம் பொறுக்குதில்லையே ……… - மண் பயனுற வேண்டும்- கவிதை போட்டி

எருதுக் கொண்டு உழுது
ஏழு மரக்கால் விதையிட்டு
ஏழ்மையை விரட்ட
ஏலேழு ஜென்மமாக போராடும் விவசாயிங்க

பூமிப்பார்த்த மண்ணை வான் பார்க்க வைத்து
பூமா தேவிக்கு உரமிட்டு காத்து
புல்யின்றி களையின்றி வளர்த்து
பலனின்றி உழைக்கும்
பாவம் செய்த விவசாயிங்க

கனவுகள் சிலக் கண்டு
கடன்கள் பல வாங்கி - பெண்ணை
கரைச்சேர்க்கும் தகப்பனைப் போல்
கைக்குள்ளே பொத்தி வளர்த்த நெல்மணியை
கதிர் அறுவடை செய்யும் விவசாயிங்க

வணிகம் செய்யத் தெரியாதுங்க
வாய்ப் பொத்தி அழத்தான் தெரியும்ங்க
வாழத் தெரியவில்லையென்று
வாய்க்கரசிப் போட்டுவிடாதீர்கள்
விவசாயத்திற்கு வாரிசு இல்லையென்று எண்ணும்பொழுது வஞ்சமில்லா நெஞ்சமும் பொறுக்குதில்லையே …..….!

எழுதியவர் : ராஜா (7-Feb-15, 3:03 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 85

மேலே