பயனில்லை

மறைத்து பயனில்லை மறந்துவிடு என்கிறார்கள்...
அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது ???

மறந்துவிட்டால் எனக்கும் அவளுக்கும்
எவ்வித வேறுபாடும் இருக்காது !

மறந்துவிட்டால், என் காதல்
உண்மையானதாக இருக்காது !

மறந்துவிட்டால், வலிகளை தவிர
வாழ்வில் வேறெதுவும் இருக்காது !

மறந்துவிட்டால், மண்மேல்
என் உடலும் இருக்காது !

மறந்துவிட்டால், என் உடலில்
உயிரும் இருக்காது !

மறைத்து பயனில்லை தான்,
மறந்தால் நானே பயனில்லாமல் ஆகிடுவேன் என்று ...

எழுதியவர் : senthilkumarss (7-Feb-15, 3:09 pm)
Tanglish : bayanillai
பார்வை : 323

மேலே