மறுபடி உன்னுடன் சேர்வேனா
வழித்துணை நீ என நானிருந்தேன்
வலிகளை மறந்தே வாழ்ந்திருந்தேன் - என்
ரணங்களின் ரத்தத்தை நீ துடைத்தாய்
ரகசியமான என் மருந்தே !
பாதையில் இருவரும் சென்றிருந்தோம்
பாதியில் தனியே ஆனேனே!
மறுபடி உன்னுடன் சேர்வேனா
இருளிலும் உன் நிழல் ஆவேனா?