நினைவுகளின் வாழாவெட்டி

எவனோ ஒருவன் ~~~~!

மனதில் பசை போல
~~~~ஒட்டிக் கொண்டுவிட்டான்
இன்றும் நெஞ்சோடு உடன்பட்டு
~~~~~உபாத்தியன் இன்றி
பாடங்களைப் பயின்று
~~~~ஆதி தொட்டு அந்தம் வரை
ஆற்றல் படைத்து
~~~~உவர் நீரில் நான் வடிக்கின்ற
மழைத்துளிகள் கலை உருவாய்
~~~~அவன் உருவம் பதிக்க

அடவி முழுதும் அமைதியாகப் பரவி
~~~~தென்றல் கொஞ்சும் இலை நுனியில்
என் விழிகளின் பனித்துளிகளை
~~~~நுகர்ந்தபடி காரணங்கள் தேடி
அலைகின்றான் -தன்
~~~~மணவாட்டியை மண்டியிடும்
நிலையில் விட்டுவிட்டு
~~~~நிலையில்லாமல் இன்னல்களோடு
இதயம் திறந்து தயங்கி நிற்கிறான்
~~~~தலைவி இவள் காலில் மாட்டிய
கொலுசு போல சத்தம் இன்றி சந்தம் இசைத்து

எழில் கொஞ்சும் உணர்வுகளை
~~~~பாவை இவள் மனம்
கண்ணியாக இதழில் தொடுத்து
~~~~முகிலும் முனுமுனுக்கும்
இடியின் இடர்பாடுகளோடு
~~~~சிந்தனைகளை சிறை பிடித்து
அழிவுகளோடு ஆரணம் கோர்த்து
~~~~குழவி போல குமுறுகிறாள்
காலன் பிடியில் மாட்டிக் கொண்ட
~~~~துகள் போல அரும்புகளை முடக்கி
உறவுகளை இழந்து ஊதாரியாக
~~~~வாழுகிறாள் -அவன்
நினைவுகளை இதையப்பையில் சேர்த்து

துடிதுடித்த உள்ளமும்
~~~~சுத்தமாக தேர்ச்சி அடைந்து
தளர்ந்து போகின்றதே
~~~~சிந்திக் கொண்டு இருக்கின்ற
துளிகளை சிந்தித்துக் கொண்டு
~~~~கவலையற்ற நிலையில்
உண்மைகளை அசைவின்றி
~~~~நிலை நிறுத்தி விட்டாள்
தைரியமான தன் காதலை
~~~~எண்ணி தோய்ந்து போய்

அவன் சாயலை நுண்மையாக
~~~~நினைவுபடுத்தி -அவன்
மொழிகளை இதயத்தில் நுழைத்து
~~~~முழு நிறைவு காணுகிறாள்
அவன் விழிகளை சுமக்கும்
~~~~பாக்கியசாலி தான் என்று
பித்துப் பிடித்து புனல் இன்றி
~~~~அனல் கொண்டு கண்ணீரில் தீக்குளிக்கின்றாள்

இரு கண்மடல்களிலும்
~~~~பூமாரியாக நினைவுகள் முழுதும்
மனதை மொய்க்க பேறுகள் பெற்று
~~~~போதித்துக் கொண்டு இருக்கின்றாள்
தலைவன் பெயரை நிதமும் சொல்லி
~~~~புத்தி கலங்கி அவளை விட்டு நீங்கிய
அவனை நீக்கிவிட்டு -அவன்
~~~~நினைவுகளோடு மட்டும்
வாழாவெட்டியாக வாழுகிறாள்
~~~~மிகுதியான் தன் காதலை
தகுதியாக நினைவுகள் மூலம் வாழ வைத்து ~~~~!

எழுதியவர் : கீர்த்தனா (8-Feb-15, 12:37 pm)
பார்வை : 381

மேலே