கருப்புக்காகம் ஒன்று
'கருப்புக்காகம் ஒன்று கரைந்ததென்
வீட்டின் கூரை மேலே.,
அன்று தான் அவள் தென்பட்டாள் என் விழியின் மேலே.,
அவள் விழிகளின் நிறமோ மரகதப்பச்சை.,
அவ்விரண்டும் எக்கனமும் முகப்பில் நின்று நோக்கும் என்னை.,
மரகத பொம்மை அவளை ஏந்தி செல்லும் முத்து வாகனத்தில் மோதி உயிர் துறந்தேன்.
இன்று காகமாய் கரைக்கிறேன் அவள் வீட்டின் கூரை மேலே...!