நீவாபோ
நீண்ட நாட்களாய் தமிழிலே எனக்கிருந்த ஐயம்
நீ, வா ,போ என்பவை எழுத்துக்களா ?சொற்க்களா? என்று.
ஐயம் தீர்க்க வந்த தமிழரசியே
'நீ' என்னை 'வா' என்றதும் அதை கனிச்'சொல்'லென்று உனர்ந்தேன்.
அன்று
வானவில் சாயங்கள் விற்று
நான் வாங்கினேன் உன் நிழலினை
இன்று
உன் நிழலோடு வாழ்பவன் நிஜம் தேடி அலைகிறேன்.
'நீ' என்னை 'போ' என்றதும்
அதை ஓர் எழுத்தென்று நினைத்தேன் கடைசியில் தான் புரிந்தது அது என் தலை'எழுத்து'என்று
'நீ' பிரிந்த அந்நாளில்.
இன்று
என் ஐயமும் அன்பும் தொலைந்ததுன் தமிழ் புத்தகப்பார்வையில்...