நெஞ்சு பொறுக்குதில்லையே -
எந்த ஒவியனோ எந்த படைப்பாளியோ எந்த மனிதனோ
அற்ப சில்லரைக்காசுக்கு சலனநீரிட்டு வரைந்திருப்பானோ
நீதித்தேவதை, பாரததாய் பொம்மை வரைப்படங்களை. !?
இப்பொம்மைகள் பெண்களாம், ஜனநாயகம்தான் கற்பாம்.
அய்யகோ.. !அய்யகோ.!!. உயிரற்ற பொம்மைகளையும்
உடையுரித்து சீரழிக்கின்றனரே கட்சிகளின் பொறுக்கிகள்..!
பொய்யுரைத்தலுக்கும் கொள்ளையடித்தலுக்கும்
அரசியல் என்று பெயரிட்டு குரைத்து அலைகிறதே
தறிகெட்ட இன்றைய அரசியல்வாதி நாய்கள்....!
மூடநம்பிக்கையில் திரியும் வாக்காள பெருங்குடிமகனே(ளே)..!
இப்பொம்மைகளும் உனக்கு கடவுளெனும் புனிதம்தானடா?
ஒன்றுகூடி கூக்குரலிட்டால் எதுவும், எதையும்
வென்றெடுக்கும் சரித்திர சூத்திரம் நீ அறியவில்லையடா....!
இதோ விதைத்து இருக்கிறேன் என் எழுத்துக்களை..!
இவை கொச்சையோ குறைச்சலோ நான் அறியேன்...!
அரசியல் சாக்கடை, குபபையென்று ஒதுங்கித்தொலையும்
வக்கற்ற தொடைநடுங்கி வாக்காளர்களை கண்டு,
கன்னத்தில் ஒங்கி அறையும் கடுஞ்சினமையூற்றி
அக்னித்தாளில் ’நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்றாவது
நானும் எழுதித்தொலைக்கிறேன் இக்கவிதையினை.
---------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.