ஆர்ப்பரிப்பு
பெருக்கெடுத்தோடும்
காதல்வெள்ளத்தில்
காய்ந்த சருகென
மிதக்கிறேன்.
உன் நினைவுச்
சமுத்திரத்தின்
பின்னலலைகளில்
மூழ்கிமறைகிறேன்.
எனையிழந்த பின்
இன்னும் எதை
தேடுகிறேன்.
இதோ ஒவ்வொரு
மறைவிலும்
மீண்டும் ஆர்ப்பரிக்கும்
இச்சுழற்சி
முடிசூடிய
முடிவிலி.
--கனா காண்பவன்