இனித்திடும் என்னவன் இறுமாப்புக்காரன்
இலக்கணம் இவன் ஆண்மையில்
இன்னும் கற்க வேண்டியிருக்கும்
இலக்கியம் இவன் இனிமையில்
இன்பமாய் இலயிக்கும் .....
காதலுக்கு என்மீது தணியாத
கோபம் காரணம் காதலுக்கும்
அவன்மீது ஒருதலைக் காதல்
பெளணர்மி தோற்றம் எனக்கு
மட்டும் இருளொளி வீசும்
காரணம் அவளும் ;என்னவனை
ஒரு தலையாய் காதலித்ததால் ....
கரைதொடும் அலை என்விரல்
கண்டால் போதும் இழுத்தவளை
கடலில் தள்ளிவிடலாமென
கண்கொட்டாமல் காத்திருக்கிறது ----
காரணம் அவளுக்கும் என்னவன்மீது
ஒருதலைக் காதல் ...
பூக்கள் எல்லாம் நான்பறிக்க
முட்களை மட்டும் நீட்டுகிறது
கேட்டால் எதிரிக்கு எதிர்ப்புதான்
என்கிறது ..பூவுக்கும் என்மாமன்
மீது அதீத காதலாம்....
என்செய்வேன் நான் ?
என்னவன் விரல் நீட்டுகிறான்
வானத்து நிலா அவனிடம்
வட்டமடிக்க அதைகொணர்ந்து
ஆயுள்கைதி ஆக்கிவிட்டான்
என் நெற்றியில் ...
பூஞ்சோலைக்குள் புகுந்து -அந்த
பூக்களை எல்லாம் கொணர்ந்து
புதுவாசம் வீசும் உனக்கடிமையடி -இந்த
பூக்களென என்கரு கூந்தல்
கம்பிகளுக்குள் அடைத்து விட்டான் ....
நுரைத்துப் பொங்கும் அந்த
கடல் அலைகளை எல்லாம்
கொணர்ந்து வந்து கொலுசாக்கி
அதன் ஓசையை விஞ்சிடும் -என்னவன்
விசில் ஓசையை கூட்டி
என்காலடி கைதியாக்கி விட்டான் ....
மிச்சம் இருக்கும் என் எதிரியை
அந்தக் காதலை கொணர்ந்து
கட்டில் காலினில் கட்டி
கடும் குளிருக்கு கைதியாக்கிவிட்டான் ...
என் இனிய காதலுக்கு சமர்ப்பணம் .....