கனவுகளே

நித்திரையின் வீதியில்
என்னை கரம் பிடித்து
செல்லும் கனவுகளே!

காற்றிலேறி பறந்து போவதும்
ஆழ்கடலில் நடந்து போவதும்
நினைத்ததை அடைந்து
நிம்மதி கொள்வதும்
அழகிய கனவில்தான் .

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (9-Feb-15, 5:22 pm)
Tanglish : kanavukale
பார்வை : 107

மேலே