வசந்த காலம்
கணவன் மனைவி இருவரும் ஓவியக் கண்காட்சி ஒன்றுக்குச் சென்றிருந்தார்கள். இலைகளால் ஆன ஆடை அணிந்த ஒரு பெண்ணின் படத்திற்கு “வசந்த காலம்” என்று தலைப்புக் கொடுத்திருந்தனர்.
அந்தப்படத்தின் அருகே வெகுநேரம் நின்று கொண்டிருந்த கணவரைப் பார்த்து எரிச்சலோடு மனைவி சொன்னாள்.
“நீங்க எவ்வளவு நின்றாலும் இலையுதிர் காலம் வராது, வாங்க போகலாம்”