அதிகாலை

"அதிகாலை"
தனிமைத்தீயில் எரியும் மதியவள் கதிரவன் கண்பட்டு கதிமோட்சம் அடையும் அழகிய வேளை...
ஆதிபகவன் சந்தம் செவி வருட
அவன் அந்தம் சேர அல்லி அவிழ்க்கும் செங்காந்தள் யாசிக்கும் வேளை...
ஆழிக்குள் மறைந்த ஆதவன் மலர அவன் வருகை எண்ணி
அரும்புகள் அரும்ப விழையும் ஆம்பல் விரும்பும் வேளை...
பூவிதழ் மடியில் பனித்துளி தவழ
இரவின் பிடியில் பூமகள் விலக சோம்பி திருந்த புலரி விழிக்க
இனிய நாளை இனிதே துவக்கும் அதிகாலை..