கறைபடிந்த இரும்புக்கோட்டை

..."" கறைபடிந்த இரும்புக்கோட்டை ""...

பயிர்களின் நடுவே களைகள்
இருப்பதுபோல் களைகளின்
இடையே சில நல்ல பயிர்கள்
காவல்துறையில் இடம்மாறி
இடம்மாற்றி நடப்படுவதுண்டு !!!

குற்றங்களுக்கு கூட்டாய்
நிற்பதுமுண்டு கூண்டோடு
அவர்களை பிடிப்பதுமுண்டு
மதில்மேலுள்ள பூனைகள்
எப்பக்கமும் பா(சா)யலாம் !!!

காவல்துறை சூழ்ச்சியரின்
ஏவல் துறையாய்மாறின
வட்ட சதுரங்களின் வாகன
கதவுகளை திறந்துவிடும்
கடமை செய்யும் காக்கிசட்டை !!!

ப(ல)ணம் படைத்தவரின்
சீட்டுக்கட்டில் கோமாளிகள்
இவர்களால் தன் ஆட்டமதை
இழப்பவரும் உண்டு ஆடியே
சில வென்றவரும் உண்டு !!!

லஞ்சத்தால் வஞ்சம்செய்யும்
கல்நெஞ்சர்களின் மத்தியில்
இல்லார்க்கும் இருப்போர்கும்
நியமத்தின் வழி எல்லோர்க்கும்
ஒருபோல தன் கடமைகளை !!!

தவறாததை நல் நிலைநிறுத்தி
முறையாக வழங்கிடும் நல்ல
சில மனிதமுள்ள காவலரே
உன் கண்ணியமான கடமைக்கு
உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (10-Feb-15, 10:26 am)
பார்வை : 730

மேலே