உள்ளே ஒரு ராகம்
..கண்களின் அழகை
கைகளில் எடுத்து
செல்லரித்த நினைவுகளை
சுத்தம் செய்து கொண்டிருக்கும் வேளை
என் செவிகளின் உள்ளே ஒரு குரல்
எனக்கு மட்டும் கேட்பதாய்
இனிய ராகமொன்று இசைத்திட
உள்ளிருந்து எழுகின்ற
விம்மலின் விளைவு
விசும்பலாய் மாறிய போது
தன்னிரக்கம் கொள்ள
இச்சையின்றிப் போனதால்..
தலையை வருடிக் கொண்டு ..
நினைவுகள் விலகிட..
சற்றே சாய்ந்து ..
கண் மூடினேன்..
கனவிலும் ..
நீ!
அந்தியின் மயக்கமாக!