சுமை இல்லாத சுகம்

மாநகரத்தின்
மாட்சி பொருந்திய
கல்விச்சாலை உள்ளே
எதிர்கால கனவுகளுடன்
விழித்தபடி சிறப்பாக
படிக்கின்றாள் பெண்..
பெரும் செலவில் !
...
வெளியில் ..
வணிகச் சந்தையில்
தோள் மீது
நாள் முழுதும்..
மூட்டைகள் சுமப்பதில்
சுமை தெரியவில்லை
அவள் தந்தைக்கு!
..

அவன் மூட்டை சுமந்து
குடும்பம் காப்பது
தெரியாது அவளுக்கு!

எழுதியவர் : கருணா (10-Feb-15, 5:18 pm)
Tanglish : sumai illatha sugam
பார்வை : 254

மேலே