பணம் படுத்தும் பாடு
அளவுக்கு மிஞ்சியது நஞ்சம்மா
அடி அணங்கே உனக்கிது அடுக்குமா?
அடுத்த வேளை உணவுக்கு
அல்லல் படுவோர் பலர்
அழகை காட்டி உலகுக்கு
ஆசையை தூண்டுபவர் பலர்
வறுமை ஒரு பக்கம்
வஞ்சனை ஒரு பக்கம்
ஆகவே......
அரை நாண் வாங்க ஒரு 5 ரூபா கொடு
அந்த ஏழைச் சிறுவன்
அம்மணமாயிருக்கிறான்
வாழ்க பண நாயகம்....