புனித வாலண்டைன் தினம்
ரோசாவும் மல்லிகையும் கூட
மணம் இழந்து போகலாம்
கொம்பு தேனும் கசந்திடலாம்
தீங்கரும்பும் சாரிலாமல் கரிக்கலாம்
ஆனால் என்றும் இனிக்கும் இனியவளே
கற்பெனும் பூஷனமே -அந்த
காமதேவன் எனக்களித்த ஒப்பிலா
மனகயர்க் கரசியே எந்தன் மனைவியே
இன்று இந்த புனித வாலண்டைன் நாளை
ஒப்பிலா நம் காதல் தினமாய் நினைத்து
கொண்டாடிவோம் களித்திடுவோம்