ரசிக்கவைத்த எழுதப்படாத கவி
ரசிக்கவைத்த எழுதப்படாத கவி
--------------------------------------------------
***********************************
ஊமைகள் காதலிக்கலாம்
தப்பில்லை ...
ஊமையாகத்தான்
காதலிக்ககூடாது ?
**********************************
-சண்முக சுந்தரம் -
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(அன்றொரு நாள் என் அன்பு தோழர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கையில் , கவி பற்றிய பேச்சும் எழுந்தது , நான் கவி எழுதி பழக்கப்பட்டவன் , ஆனால் அவன் அவ்வாறு எழுதுபவன் அல்ல , ஆனால் அன்று அவன் சொன்ன ஒரு கவி (மேலேஉள்ளது ) என்னால் டைரியில் எழுதமுடியவில்லை , ஏனெனில் என் மனதில் எழுதிவிட்டு சென்று விட்டான் அவன் , அன்று தான் முதன் முதலாய் நான் அறிந்துகொண்டேன் , நான் இன்னும் முழுமையடையவில்லை . இத்தளத்திற்கு வந்த பின் சில நற்கவிகளை படிக்கநேரும் போது அது இன்னும் தொடர்கிறது . என் உடன் மின்வாரியத்தில் பணிபுரியும் என் அன்பு நண்பர் சண்முக சுந்தரத்திற்கு என் நன்றிகள். இக்கவியை எண்ணத்தில் பதிந்திருந்தேன் நண்பர்களின் கருத்துக்கள் தந்த ஊக்கத்தால் கவி பகுதியில் பதிவிடுகிறேன் )
அன்புகளுடன் --குமரேசன் கிருஷ்ணன் --